இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும்
குமரன் புத்தக இல்லம், 2012
ISBN 978-955-659-343-3
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது. இலங்கையானது எல்லா நாடுகளும் இலங்கையின் நண்பர்களே என்ற நிலைப்பாட்டிலிருந்தாலும் இலங்கையின் தந்திரோபாயச் செயற்பாட்டில் அவ்வப்போது ஏற்படும் சமநிலையற்ற தன்மைகளும்,தளம்பல்களும் இதற்கு முட்டுக்கட்டையாக அமைகின்றன.இந்தியாவின் விருப்பத்தினை மீறி இலங்கையில் அதிகரித்துச் செல்லும் சீனாவின் முதலீட்டினால் இந்தியாவும், ஐக்கிய அமெரிக்காவும் பெரும் அசௌகரியத்திற்குள்ளாகி வருகின்றன.இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தந்திரோபாயப் பங்காளர்களாக ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கா,சீனா ,இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை தம் நலன் சார்ந்து இலங்கையுடன் இணைந்து வெற்றிகரமாக முடித்து வைத்துள்ளனர். இச்சூழ்நிலையில் எழுதப்பட்ட இந்நூல் ஆறு அத்தியாயங்களையும் பல உப தலைப்புக்களையும் உள்ளடக்கியுள்ளது.
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் by Thanabalasingham Krishnamohan