Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

Civil Society

Civil Society

Civil Society by Thanabalasingham Krishnamohan

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு by Thanabalasingham Krishnamohan

Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party Mediation

Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party Mediation

Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party...

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை by Thanabalasingham Krishnamohan

இலங்கை பொது நிர்வாக முறைமை

இலங்கை பொது நிர்வாக முறைமை

இலங்கை பொது நிர்வாக முறைமை , by Thanabalasingham Krishnamohan

  • Civil Society

    Civil Society

    Tuesday, 15 October 2013 23:18
  • மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

    மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

    Tuesday, 15 October 2013 23:26
  • Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party Mediation

    Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party...

    Tuesday, 15 October 2013 23:29
  • இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

    இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

    Tuesday, 15 October 2013 23:32
  • இலங்கை பொது நிர்வாக முறைமை

    இலங்கை பொது நிர்வாக முறைமை

    Tuesday, 15 October 2013 23:31
Plantation Trade Union Movement in Sri Lanka
Plantation Trade Union Movement in Sri Lanka
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.
More...
Comparative Politics
Comparative Politics
ஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9

பிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.

More...
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
சர்வதேச ஆய்வுப்பரப்பில்‌ அரசறிவியல்‌, நிர்வாகவியல்‌ போன்ற துறைகள்‌ மிகுந்த அவதானத்தையும்‌, முக்கியத்துவத்தையும்‌ பெறுகின்றன. இவ்வகையில்‌ "பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌" என்ற புதுக்கிய இந்நூல்‌ பல்கலைக்கழக மாணவர்களுக்கும்‌, புலமைத்துவம்‌ சார்‌ சமூகத்தினர்க்கும்‌ பயனுடையதாகும்‌.

சிவில்‌ சேவை தொடர்பான பொதுவான அறிமுகத்துடன்‌ சர்வதேச நாடுகளின் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ்‌, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை முதலான நாடுகளின்‌ சிவில்‌ சேவைக்‌ கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தி ஒப்பியல்‌ நோக்கில்‌ இந்நூல்‌ எழுதப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்‌.
More...
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.
More...
Political Science: Study of State and Identification of State
Political Science: Study of State and Identification of State
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
More...
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கை நெறி தொடர்பான ஆய்வுகள் மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகளிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பவைகளில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம் அதிகாரம், கலாசாரம். நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கை நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. தனிப்பட்ட, தேசிய, சர்வதேசிய மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கை நெறி மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இவ்வகையில் தமிழ்மொழி மூலமான பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொதுவான விடயங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.
More...
Political Science: Political Activity and Political Processes
Political Science: Political Activity and Political Processes
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
More...

Around the World

  • The National Building Research Organisation (NBRO) has issued a Level 3 (Red)Landslide Early Warning for several divisional secretariat divisions (DSDs) in Kandy, Matale and Nuwara-Eliya districts urging the residents of these areas to evacuate to safer locations. MORE..

    Read more...
  • The Monetary Policy Board of the Central Bank of Sri Lanka (CBSL) has decided to implement a single policy interest rate mechanism, the Overnight Policy Rate (OPR), transitioning from its dual policy interest rate mechanism with effect from today (27[…]

    Read more...
  • A total of six flights scheduled to land at the Bandaranaike International Airport (BIA) in Katunayake have been diverted to the Mattala Airport and the Thiruvananthapuram International Airport in India due to adverse weather conditions. MORE..

    Read more...
  • (UPDATED) At least eight persons including 06 children are reported missing while two children have been rescued after the tractor they were travelling on was caught in flood waters in Karaitivu in Ampara District this evening (26). MORE..

    Read more...
  • The Disaster Management Centre (DMC) says that the prevailing inclement weather conditions in the country have so far affected 77,670 persons from 22,532 families across 15 districts. MORE..

    Read more...
  • India s coast guard said Tuesday they had seized their biggest haul of illicit drugs when they stopped a fishing boat smuggling 5.5 tonnes of methamphetamine from war-torn Myanmar. MORE..

    Read more...
  • The Local Consortium of Sri Lanka (LCSL), comprised of domestic commercial banks and financial institutions, has committed its full support for the Exchange Offer and Consent Solicitation launched today by the Government of Sri Lanka to restructure the US$12.55bn in[…]

    Read more...
  • Sri Lanka s new president, Anura Kumara Dissanayake, should address the country s many human rights problems by fulfilling and building upon pledges he made in recent election campaigns, Human Rights Watch has said in a letter to the president.[…]

    Read more...
  • The Steering Committee of the Ad Hoc Group of Sri Lanka Bondholders has announced its support for the restructuring terms of all 11 series of Sri Lanka s c.$12.55 billion in outstanding sovereign bonds, as detailed in Sri Lanka s[…]

    Read more...
  • The Examinations Department announced that it has been decided to temporarily suspend the ongoing 2024 G.C.E. Advanced Level Examination. MORE..

    Read more...
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

( தினக்குரல் , புதிய பண்பாடு இதழில் 2013.06.01, 2013.06.02 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )

clip_image002 ஒருநாட்டின் வெளியுறவுக் கொள்கையானது சட்டபூர்வமான மக்கள் விவகாரமாகும். வெளிவிவகாரச் செயற்பாடுகளில் அரசாங்கத்தின் நடத்தையினை கோடிட்டுக்காட்டும் விதிகளை உள்ளடக்கியிருப்பதே வெளியுறவுக் கொள்கையாகும். உலக நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் ஒரு அரசு பேணிவரும் உறவுகளில் தனது நலன்கள் எத்தகையது என்பதை வெளியுறவுக் கொள்கை மூலம் மிகவும் தெளிவாக அடையாளப்படுத்திக் கூறுகின்றது. மேலும் ஒருநாட்டின் புவியியல் மையம் அந்நாடு பின்பற்றும் அரசியல் கொள்கை, பூகோளப் பொருளாதாரம், உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் காட்சிநிலை என்பவற்றில் வெளியுறவுக் கொள்கை உருவாக்கம் தங்கியுள்ளது. வெளியுறவுக் கொள்கையானது உள்நாட்டில் காணப்படும் எல்லா வகையான அரசியல்,பொருளாதார கொள்கைகளுடனும் இணைந்து செல்வதாக இருக்க வேண்டும். எனவே ஒருநாடு எவ்வகையான ஆட்சிமுறைமையை பின்பற்றினாலும், வெளியுறவுக் கொள்கைக்கு விசேட முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அரசும், அதிகாரத்திலிருக்கின்ற அரசாங்கமும் சர்வதேசளவில் தனது நாட்டின் நற்பெயரைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். சில நேரங்களில் வலுவுள்ள அரசுகள் தமது சர்வதேச அரசியல் வறுமைக்காகவும், குறுகிய நோக்கத்திற்காகவும் வலுவற்ற அரசுகளை கருவியாகப் பயன்படுத்தக்கூடும். இவ்வாறான சந்தர்பங்களில் தமது கௌரவத்தை காப்பாற்ற சிறிய அரசுகள் தயங்கக்கூடாது. சுருக்கமாகக் கூறின் ஒருநாட்டின் வெளியுறவுக் கொள்கை குறுகிய நோக்கம் கொண்டதாகவும், செயலற்றதாகவும் இருக்கக் கூடாது.

மகிந்த சிந்தனை

எதிர்கால இலங்கையின் வெளியுறவுக் கொள்கை எவ்வாறு கட்டமைக்கப்படும் என்பதை அரசின் கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மகிந்த சிந்தனை எடுத்துரைக்கின்றது. அணிசேராமை என்ற கொள்கையினையே தனது வெளியுறவுக் கொள்கையாக இலங்கை தொடர்ந்து பின்பற்றும். இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் மற்றும் ஆசிய நாடுகளுடன் கடந்த காலங்களில் நட்புறவினைப் பேணிவந்தது போல் எதிர்காலத்திலும் இலங்கை தொடர்ந்து பேணிவரும். அரசியல்,பொருளாதார, பாதுகாப்பு, வர்த்தக மற்றும் கலாசார விடயங்களில் இந்நாடுகளுடன் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் நட்புறவினைப் பேணவே இலங்கை விரும்புகின்றது.

மாற்றமடைந்து வரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப சர்வதேச ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும் மதித்து நடப்பதுடன், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் துணை நிறுவனங்களுடன் உறவினை இலங்கை பலப்படுத்திக் கொள்ளும். இலங்கையின் கௌரவத்தினை வெளியுறவுக் கொள்கையினூடாக பாதுகாப்பதுடன், உலக நாடுகளுடன் உறவினை வலுப்படுத்துவதற்கு புதிய திட்டங்களும் உருவாக்கப்படும் என மகிந்த சிந்தனை கூறுகின்றது. எனவே இருக்கின்ற நண்பர்களுடனான உறவினைப் பலப்படுத்துவதும்,புதிய நண்பர்களைத் தேடுவதும் இலங்கையின் கொள்கையாகும் எனக் கூறப்பட்டது. 'எல்லோரும் நண்பர்கள்' என்பதே இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் வழிகாட்டும்; தத்துவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

நண்பர்களும் எதிரிகளும்

2009 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை பின்பற்றிய சீனச்சார்பு கொள்கையினால் இலங்கை சர்வதேசளவில் பெரும் சவால்களையும், அழுத்தங்களையும் எதிர்கொள்ளத் தொடங்கியது. 'எல்லோரும் நண்பர்கள் என்ற வழிகாட்டும் தத்துவத்திலிருந்து இலங்கை விலகிக் கொள்ளத் தொடங்கியது. இதனால் இலங்கை தனது நண்பர்களுக்குள்ளேயே எதிரியை உருவாக்கிக் கொண்டது. ஆரம்ப காலங்களில் எந்தவொரு நாடும் இலங்கையினைத் தனது எதிர் நாடாகக் கருதி செயற்படும் வகையில் இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையினை வகுத்திருக்கவில்லை. எல்லா நாடுகளுடனும் இலங்கை நட்புறவினையே பேணியது.

2009 ஆம் ஆண்டின் பின்னர் இந்தியாவினாலும் குறிப்பாக தமிழ்நாட்டினாலும், ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினாலும் (Diaspora) இலங்கைக்கு எதிரான நாடுகள் உருவாக்கப்பட்டன. இதனை இலங்கை தடுக்கவேண்டுமாயின் இந்தியாவும் ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும்; நண்பர்களாகும் வகையில் இலங்கை தனது உள்நாட்டுக் கொள்கையினை மாற்றவேண்டும். அதாவது இலங்கை தனது எதிரியை குறைத்து மதிப்பீடு செய்யாமல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளை அறிவு பூர்வமாக வகுத்து அதன்மூலம் இலங்கையினை எதிர்க்கும் நாடுகளை வெற்றி கொள்ள வேண்டும்.

இன்னோர் வகையில் கூறின் நண்பர்களுக்குள் இருந்து உருவாக்கப்பட்ட எதிரியை இலங்கை மீண்டும் நண்பர்களாக்குதல் வேண்டும். இதற்கு ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவு செய்ய இலங்கை முன்மொழிவுகளை முன்வைப்பதுடன் அதனை நடைமுறைப்படுத்தவும் வேண்டும். இதனைச் செய்ய இலங்கை பின்நிற்குமாயின் மேலும் பல எதிர் நாடுகளை சர்வதேசளவில் சந்திக்க வேண்டியேற்படலாம்.

மனிதவுரிமைகள் பேரவை

2009ஆம் 2012 ஆம் மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் பேரவையில் யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்காக இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பு விடப்பட்டது. 2009 ஆம் ஆண்டு யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்காக இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது இந்தியாவின் ஆதரவுடன் பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. இக்காலத்தில் யுத்தக்குற்றச்சாட்டிலிருந்து இலங்கையினை மீட்பதற்கு இந்தியா சர்வதேசளவில் பெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததுடன் இலங்கையினைப் பாதுகாத்தும் இருந்தது.

ஆனால் 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் குறிப்பாக இந்தியா,பிறேசில் உட்பட பல நாடுகள் 2012ஆம் மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. 2009 ஆம் ஆண்டு வாக்களிப்பில் கலந்துகொள்ளாத ஆர்ஜன்ரீனா 2013 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. 2009 ஆம், 2012 ஆம் ஆண்டுகளில் வாக்களிப்பில் கலந்து கொள்ளாத தென் கொரியா 2013 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளது.

பிறேசில், ஆர்ஜன்ரீனா, பேரு, உருகுவே போன்ற நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் கூட்டணி நாடுகளாகக் கருதப்படுவதில்லை என்பதுடன், ஐரோப்பிய யூனியனில் இந்நாடுகள் அங்கத்துவம் கேட்கவுமில்லை. இவ்வாறு யாராவது வாதிடுவார்களாயின் அதில் எவ்வித உண்மையும் இருக்கப் போவதில்லை. இந்நிலையில் இந்நாடுகள் ஏன் இலங்கைக்கு எதிராக வாக்களித்தன என்பதை இலங்கை அரசாங்கம் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் பிறேசில் ஆர்ஜன்ரீனா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் எவ்வித ஆதரவுப் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டிருக்கவில்லை என்பதை அவதானத்தில் கொள்ளுதல் வேண்டும். இந்நிலையில் இந்நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்தமைக்காக வேறுபல நியாயங்களை கூற இலங்கை முயற்சிக்குமாயின் அது சிறந்த இராஜதந்திரமாக அமையாது. மேலும் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் மக்களை தமிழீழ விடுதலைப்புலிகளின் எச்சங்களாகவே இலங்கை அரசாங்கம் கருதுகின்றது. இவ்வாறு கருதுவதும் சிறந்த இராஜதந்திரமாகாது.

பின்னடைவுகள்

இலங்கை சர்வதேசளவில் தனது நண்பர்களை இழந்து வருகின்றது என்பதும், சர்வதேசளவில் தனது கௌரவத்தை பாதுகாக்க முடியாது திணறுகின்றது என்பது கசப்பான செய்தியாகும். இதன் தாக்கத்தினை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கையடைந்த தோல்விக்குப் பின்னர், இவ்வருட இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ள (2013) பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் மகாநாட்டினை தடுப்பதற்கான பிரச்சாரங்கள் சர்வதேசளவில் ஆரம்பமாகியுள்ளமை மூலம் உணரமுடியும். அதேபோன்று பொருளாதார விடயங்களிலும் இலங்கை பின்னடைவினைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது.இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக்கூடிய சர்வதேச அபிப்பிராயம் உருவாக்கப்பட்டமையினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் உல்லாசப்பிரயாணிகளின் வருகை இலங்கையில் பெருமளவில் வீழ்ச்சியடைந்ததுள்ளதாக கூறப்படுகின்றது.

ஒருநாட்டின் புகழ்,கீர்த்தி என்பவற்றினைத் தீர்மானிப்பதில் சர்வதேச அபிப்பிராயம் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னைநாள் செயலாளர் பூட்ரஸ் பூட்ரஸ் - காலி (Boutros Boutros-Ghali) சர்வதேச அபிப்பிராயம் தொடர்பாக விபரிக்கும் போது 'ஒரேயொரு வல்லரசுதான் உலகிலுள்ளது என்பதில் எவ்வித உண்மையுமில்லை.உண்மையில் இரண்டு வல்லரசுகள் உலகத்திலுள்ளன. ஓன்று ஐக்கி அமெரிக்கா மற்றையது உலகப் பொது அபிப்பிராயம்.' பூட்ரஸ் பூட்ரஸ் - காலி கூறிய இவ்விரண்டு வல்லரசுகளும் இன்று இலங்கைக்கு எதிராகத் திரும்பியுள்ளன.இவைகள் இலங்கையின் சர்வதேசச் சந்தையிலும்,உல்லாசப்பிரயாணத் துறையிலும் கணிசமானளவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளன. இப்பாதிப்பு புரிந்து கொள்ள முடியாத வகையில் பெரும் பாரதூரமான விளைவுகளை எதிர்காலத்தில் இலங்கைக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதை இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்துகொள்வது ஆரோக்கிமானதாகும்.

இலங்கை எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள சவால்களையும், விளைவுகளையும் ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத்திணைக்கள பேச்சாளர் விக்ரோறியா நுலண்ட் (Victoria Nuland) மிகவும் தெளிவாக கூறியுள்ளார். அவர் 'இலங்கை தேசியளவில் தனது நல்லிணக்கத்தினை செயற்படுத்தும் கடமையிலிருந்தும்,பொறுப்பிலிருந்து விலகுமாக இருந்தால் மேலும் பல சர்வதேச விளைவுகளை இலங்கை சந்திக்க வேண்டிவரும்.' எனக் கூறியுள்ளார். விக்ரோறியா நுலண்ட் கூறிய கருத்தினை இலங்கை மிகவும் இலகுவாக புறந்தள்ளுமாயின் எதிர்காலத்தில்; இலங்கையின் கௌரவம் சர்வதேசளவில் மேலும் மோசமாகலாம்.

அதேநேரம் ஐக்கியநாடுகள் சபை மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு நடைபெற்ற பின்னர் ஜெனிவாவிற்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் டொனகொ ( Donahoe ) பத்திரிகையாளர் மகாநாட்டினை நடாத்தியிருந்தார். மேலும் இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெறியினால் ( John Kerry) விசேட அறிக்கையும் வெளியிடப்பட்டது. சர்வதேச நாடுகளுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா தீர்மானங்களை நிறைவேற்றுவது வழமையானது.ஆயினும், இவ்வாறான சந்தர்பங்களில் நிறைவேற்றப்பட்ட குறிப்பிட்ட தீர்மானத்தினை அடிப்படையாகக் கொண்டு இராஜாங்கச் செயலாளர் விசேட அறிக்கை வெளியிடுவது வழமைக்குமாறானதாகும்.

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் மைக்கல் சிசென் ( Michele Sison) மிகவும் கவனமாக ஒழுங்குபடுத்தி ஐக்கிய அமெரிக்காவின் கருத்தினை பின்வருமாறு வெளியிட்டிருந்தார். 'இலங்கை தொடர்பாக சர்வதேசக் கருத்தொற்றுமையினை ஐக்கிய அமெரிக்கா உருவாக்கி வருகின்றது. யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தனது பொறுப்பினை நிறைவேற்றுவதிலிருந்து இலங்கை விலகுமாயின்; இதனை நிறைவேற்றுவதற்கான பல தெரிவுகள் மனிதவுரிமை பேரவைக்குள்ளும், வெளியிலும் உருவாகும்'. இத் தெரிவுகள் எவை? அதற்கான சர்வதேசப் பொறிமுறைகள் என்ன? என்பவைகளைத் தெரிந்து கொள்வதற்கு மேலும் ஒருவருடம் இலங்கை காத்திருக்க வேண்டியிருக்கும்.

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது. ஆனால் இலங்கை தனது பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்து காலஅவகாசத்தினை கோருகின்றது. இதனால் 2009 ஆம் ஆண்டிற்குப் பிந்திய இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மிகவும் பின்னடைவினை சந்தித்துள்ளது. 2009 ஆம் ஆண்டுவரையில் இலங்கைக்கு மிகவும் ஆதரவாக செயற்பட்ட இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் ஐக்கியநாடுகள் சபை மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கான பிரதான ஆதரவாளர்களாக மாறியிருந்தனர். 2009ஆம் ஆண்டு வரை இலங்கையுடன் கைகோர்த்திருந்த கனடா இப்போது இலங்கைக்கு எதிராகச் செயற்படுகின்றது. 2013 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் மாகாநாட்டிற்கு ஆதரவு வழங்க கனடா மறுத்து வருகின்றது. பிரித்தானியா வழங்கவுள்ள ஆதரவும் சந்தேகத்துடனேயே பார்க்கப்படுகின்றது.

என்ன செய்யலாம் ?

ஜெனிவாவிற்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் டொனகொ கூறிய கருத்தினை மிகவும் ஆழமாகவும், அவதானமாகவும் இலங்கை பரிசீலனை செய்ய வேண்டும். 'சர்வதேச விசாரணைக்கும் ஐக்கிய அமெரிக்காவின் விசாரணைக்கும் உட்பட்டிருக்கும் நாடாக இலங்கை உள்ளது' என மிகவும் தெளிவாக டொன்கோ கூறியுள்ளார். இதன்மூலம் இலங்கை தேசியமட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தனது கடமையினை நிறைவேற்றத் தவறுமாயின் இலங்கை தொடர்பான செயற்பாடுகள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்படும் என்ற செய்தி ஐக்கிய அமெரிக்காவினால் பகிரப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை தனது பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தினையும், நேரத்தினையும் சரியாக பயன்படுத்தியதாக எவராலும் இன்றுவரை உணரமுடியவில்லை.

இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில் ஐக்கிய அமெரிக்கா,சீனா,இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் சமநிலையினைப் பேண முயற்சிக்க வேண்டும். இந்நாடுகளுடன் சிறியளவிலான சார்புத்தன்மை காணப்பட்டாலும் அது பாரியளவில் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் பாதிப்பினை ஏற்படுத்தாது.ஆனால் 2009ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை வெளிப்படையாகவே சீனச்சார்பு கொள்கையினைப் பின்பற்றுகின்றது. இதனால் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை தொடர்பில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கலாசார மற்றும் வரலாற்று ரீதியான தொடர்புடன் மிகவும் அருகிலுள்ள இந்தியாவினை புறந்தள்ளிவிட்டு மிகவும் தூரத்திலுள்ள சீனாவின் கரங்களை இலங்கை இறுகப்பற்றியுள்ளது. இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் மையமாக இந்தியாவினை ஏற்றுக்கொள்ளும் புலமைசார் அறிவு ஏற்படும் போதே சமனிலையானதொரு வெளியுறவுக் கொள்கையினை இலங்கையினால் வரையமுடியும்.

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் தொழில்வான்மை மிக்க இராஜதந்திர கலைஞர்களுக்கு முக்கிய இடமளிக்கப்படுவதாகத் தெரியவில்லை. இலங்கையின் வெளியுறவுக் கொள்கையினை உருவாக்குபவர்கள் சமயோசித புத்தியுள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் இத்துறைக்குப் பொருத்தமான திறைமையுள்ள கலைஞர்களுக்கு இலங்கையில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது. உண்மையில் இலங்கைக்குப் பொருத்தமான வெளியுறவுக் கொள்கையினை வரையக்கூடிய கலைஞர்களே இன்றைய தேவையாகும்.

இக் கலைஞர்கள்; இரண்டு முனைகளில் பணியாற்ற வேண்டியுள்ளது. ஒருமுனையில் இவர்கள் இந்தியாவுடனான உறவினை கட்டமைப்பவர்களாகவும், மறுமுனையில் உலகின் ஏனைய நாடுகளுடன் உறவினைப் கட்டமைப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

இலங்கை தனது வெளிவிவகாரக் கொள்கையில் அணிசேராக் கொள்கையினை உண்மையில் கடைப்பிடித்திருந்தால் 2009 ஆம் ஆண்டு மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த மலேசியா 2012ஆம் 2013 ஆம் ஆண்டுகளில் வாக்களிப்பிலிருந்து விலகியிருக்க மாட்டாது. அணிசேரா நாடுகளின் இயக்கத்திலுள்ள உருகுவே, ஆர்ஜன்ரீனா, பேரு, பிறேசில், அங்கோலா, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருக்கவும் மாட்டாது.ஜெனிவாவில் இலங்கை கற்ற பாடத்திலிருந்து தனது பலத்தையும் பலவீனத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

Share

Who's Online

We have 111 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .

    

 
 
Invalid RSS link or you're not allowed to read this Picasa gallery or album.