மோதல் தீர்வுக் கற்கை நெறி தொடர்பான ஆய்வுகள் மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகளிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பவைகளில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம் அதிகாரம், கலாசாரம். நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கை நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. தனிப்பட்ட, தேசிய, சர்வதேசிய மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கை நெறி மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இவ்வகையில் தமிழ்மொழி மூலமான பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொதுவான விடயங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.
Political Science: Study of State and Identification of State
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
Political Science: Political Activity and Political Processes
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
பொது நிர்வாகத்தில் மனிதவள முகாமைத்துவம்: முன்னணி நாடுகளின் சிவில் சேவை மாதிரிகள்
சர்வதேச ஆய்வுப்பரப்பில் அரசறிவியல், நிர்வாகவியல் போன்ற துறைகள் மிகுந்த அவதானத்தையும், முக்கியத்துவத்தையும் பெறுகின்றன. இவ்வகையில் "பொது நிர்வாகத்தில் மனிதவள முகாமைத்துவம்: முன்னணி நாடுகளின் சிவில் சேவை மாதிரிகள்" என்ற புதுக்கிய இந்நூல் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், புலமைத்துவம் சார் சமூகத்தினர்க்கும் பயனுடையதாகும்.
சிவில் சேவை தொடர்பான பொதுவான அறிமுகத்துடன் சர்வதேச நாடுகளின் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை முதலான நாடுகளின் சிவில் சேவைக் கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தி ஒப்பியல் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்.
ஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9
பிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.